என் மகளுக்கு நீண்ட நாள்களாக வரன் பார்த்து வருகிறோம். எப்போது திருமணம் கைகூடும்? தோஷம்  உள்ளதா? பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா? 

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம் தனுசு ராசி. களத்திர ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்து பூர்வபுண்ணியம், களத்திரம் மற்றும் பாக்கிய ஸ்தானங்களைப் பார்வை செய்வது சிறப்பு. மேலும் அவரது பார்வை லாபாதிபதி

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம் தனுசு ராசி. களத்திர ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்து பூர்வபுண்ணியம், களத்திரம் மற்றும் பாக்கிய ஸ்தானங்களைப் பார்வை செய்வது சிறப்பு. மேலும் அவரது பார்வை லாபாதிபதி, தனாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகளின் மீதும் படிகிறது. அவருக்கு தற்சமயம் குருபகவானின் பார்வையை பெற்றுள்ள பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் லாபாதிபதியின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும். 

- வாசகி, நெசப்பாக்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com