எங்கள் இளைய மகனுக்கு பல வருடங்களாக பெண் பார்த்தும் இன்னும் அமையவில்லை. நிறைய பரிகாரங்கள் செய்துள்ளோம். எப்போது திருமணம் நடைபெறும்? - வாசகர், விழுப்புரம்

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், தனுசு ராசி. லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய்பகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் களத்திர ஸ்தானாதிபதியுடன் இணைந்திருப்பது

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், தனுசு ராசி. லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய்பகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் களத்திர ஸ்தானாதிபதியுடன் இணைந்திருப்பது சிறப்பு. பாக்கியாதிபதி சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். இதனால் ஹம்ஸ யோகம், மாளவிகா யோகம் ஆகிய சிறப்பான இரண்டு பஞ்சமகா புருஷ யோகங்கள் உண்டாகின்றன. பூர்வபுண்ணியாதிபதி ஆறாம் வீட்டில் புத, ராகு பகவான்களுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் லக்னாதிபதியான செவ்வாய்பகவானின் தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com