எனக்கு சர்க்கரை நோய், தலைசுற்றல் உள்ளது. எப்போது பூரண குணம் கிடைக்கும்? பரிகாரம் தேவையா? ஆயுள் எப்படி இருக்கும்? கணவரின் ஆயுளை பாதிக்குமா? அருள் தரும் தெய்வம் எது? - வாசகி, மதுரை

உங்களுக்கு மிதுன லக்னம், மேஷ ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து சுகம், ஆறு மற்றும் எட்டாம் வீடான மாங்கல்ய ஸ்தானத்தை

உங்களுக்கு மிதுன லக்னம், மேஷ ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து சுகம், ஆறு மற்றும் எட்டாம் வீடான மாங்கல்ய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். ஆறாம் வீட்டில் சுக்கிரபகவான் விபரீத ராஜயோகம் பெற்று குருபகவானால் பார்க்கப்ப படுவதும் சிறப்பு. இதனால் ஆரோக்கிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. தற்சமயம் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கும் சனிபகவானின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதி புதபகவான் திரிகோண ராசியில் அமர்ந்திருப்பதால் பாதகாதிபத்யம் நீங்கி விடுகிறது. இதனால் கணவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பிரதி புதன் கிழமைகளில் ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com