எனது மகனுக்கு ஜனன நட்சத்திரங்களாக இரு வேறு நட்சத்திரங்களைக் ( கார்த்திகை, ரோகிணி) கூறியுள்ளனர். இவற்றில் எது சரி? பட்ட படிப்பை முடிப்பாரா? அரசுப்பணி கிடைக்குமா? அல்லது சொந்தத் தொழில் செய்யலாமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், புதுச்சேரி

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம் 1- ஆம் பாதம் என்று கணிக்கப்பட்ட ஜாதகத்தை சரி என்று எடுத்துக் கொள்ளவும்.

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம் 1- ஆம் பாதம் என்று கணிக்கப்பட்ட ஜாதகத்தை சரி என்று எடுத்துக் கொள்ளவும். தற்சமயம் ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசையில் சனிபகவானின் புக்தி நடப்பதாலும் கல்வி ஸ்தானாதிபதி சுய சாரத்தில் உச்சம் பெற்றிருப்பதால் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் பட்டப்படிப்பை முடித்து விடுவார். அவருக்கு வேலைக்குச் செல்வதே உகந்ததாகும், இன்னும் மூன்றாண்டுகளுக்குப்பிறகு வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும். பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com