என் மகன் எம்.இ., பட்டதாரி. வயது 31. போக்குவரத்துத்துறை, பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை கிடைத்தும் தவிர்த்துவிட்டார். இவரது விருப்பப்படி பெண் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது அப்பெண்ணை திருமணம் செய்ய விரும்பவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், திருச்சி

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், துலாம் ராசி. லக்னம் மற்றும் அயன ஸ்தானாதிபதியான சனிபகவான் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் ஆட்சி பெறுகிறார்.

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், துலாம் ராசி. லக்னம் மற்றும் அயன ஸ்தானாதிபதியான சனிபகவான் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் ஆட்சி பெறுகிறார். தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்று அமைந்திருக்கிறார். குருபகவான் மூன்றாம் வீட்டில் அமர்ந்து களத்திரம், பாக்கியம், லாப ஸ்தானங்களையும் பார்வை செய்கிறார். களத்திர, நட்பு ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகளுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் இன்னும் ஓராண்டுக்குள் திருமணம் கைகூடும். நல்ல வேலையும் கிடைக்கும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com