மின்சார வாகன தயாரிப்புக்கு அரசின் உதவி தேவை: மாருதி சுஸுகி

இந்தியாவின் மின்சார வாகன தயாரிப்பு கனவை நனவாக்க அரசின் உதவிகள் தேவை என மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் மின்சார வாகன தயாரிப்பு கனவை நனவாக்க அரசின் உதவிகள் தேவை என மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்ததாவது: குறைந்த விலையில் மின்சார கார்களை தயாரிப்பது என்பது நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. எனவே, மின்சார வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகள் மற்றும் இதர பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான செலவை குறைக்க வேண்டியதில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதனை உணர்ந்து அரசு அதற்கேற்ற கொள்கைகளை வகுப்பதுடன், சலுகைளையும் அளிக்க வேண்டும். அப்போதுதான் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் பொது போக்குவரத்தில் 100 சதவீத மின்சார வாகனங்களையும், தனிநபர் போக்குவரத்தில் 40 சதவீத மின்சார வாகனங்களையும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் அரசின் கனவு நனவாகும்.
மாருதி சுஸுகியைப் பொருத்தவரையில், இந்தியாவில் வரும் 2020ஆம் ஆண்டில் முதல் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு அதற்கேற்ப செயலாற்றி வருகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com