புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி யுனிபார்ட்ஸ் செபி-க்கு விண்ணப்பம்

பொறியியல் துறையில் ஈடுபட்டு வரும் யுனிபார்ட்ஸ் இந்தியா புதிய பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) அனுமதி கோரி செபி-யிடம் விண்ணப்பித்துள்ளது.
புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி யுனிபார்ட்ஸ் செபி-க்கு விண்ணப்பம்


பொறியியல் துறையில் ஈடுபட்டு வரும் யுனிபார்ட்ஸ் இந்தியா புதிய பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) அனுமதி கோரி செபி-யிடம் விண்ணப்பித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
செயல்பாடுகளுக்குத் தேவையான நிதியை திரட்டிக் கொள்ளும் வகையில் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க யுனிபார்ட்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, ரூ.100 கோடி மதிப்பிலான பங்குகளை நிறுவனம் வெளியிட முடிவு செய்துள்ளது.
இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் தொகை கடன்களை திருப்பி செலுத்தவும், நிறுவனத்தின் இதர நோக்கங்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளப்படும்.
இப்புதிய பங்கு வெளியீட்டை ஆக்ஸிஸ் கேப்பிட்டல், மோதிலால் ஓஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸர்ஸ், எஸ்பிஐ கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆகியவை நிர்வகிக்க உள்ளன என்று யுனிபார்ட்ஸ் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் கடந்த 2014 செப்டம்பரில் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்ள விண்ணப்பித்து செபியிடம் அனுமதி பெற்றது.எனினும், அப்போது சந்தை நிலவரம் சரியில்லை என கருதிய அந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com