நாட்டின் பருத்தி உற்பத்தி 340 லட்சம் பொதிகளாக குறையும்: சிஏஐ மதிப்பீடு

நாட்டின் பருத்தி உற்பத்தி 340 லட்சம் பொதிகளாக குறையும்: சிஏஐ மதிப்பீடு

நடப்பு பருவத்தில் நாட்டின் பருத்தி உற்பத்தி 340 லட்சம் பொதிகளாக குறையும் என இந்திய பருத்தி கழகம் (சிஏஐ) தெரிவித்துள்ளது.

நடப்பு பருவத்தில் நாட்டின் பருத்தி உற்பத்தி 340 லட்சம் பொதிகளாக குறையும் என இந்திய பருத்தி கழகம் (சிஏஐ) தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து சிஏஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
 அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து தொடங்கிய 2018-19-ஆம் பருவத்தில் உள்நாட்டில் பருத்தி உற்பத்தி 343.25 லட்சம் பொதிகளாக (ஒரு பொதி = 170 கிலோ) இருக்கும் என்று நவம்பரில் மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், சாதகமான வானிலை இல்லாததை கருத்தில் கொண்டு பருத்தி உற்பத்தி 340 லட்சம் பொதிகளாக குறையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
 குறிப்பாக, பருத்தி உற்பத்தி குஜராத்தில் 3 லட்சம் பொதிகளும், மஹாராஷ்டிரத்தில் 1 லட்சம் பொதிகளும், தெலங்கானாவில் 1.50 லட்சம் பொதிகளும் குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.
 இருப்பினும், ஹரியானாவில் இதன் உற்பத்தி 1 லட்சம் பொதிகளும், ராஜஸ்தான், ஆந்திரத்தில் தலா 50,000 பொதிகளும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 அக்டோபர் 1 முதல் தொடங்கிய நடப்பு பருவத்தில் பருத்தி கையிருப்பு 23 லட்சம் பொதிகள் என கணக்கிடப்பட்டுள்ளது.
 நடப்பு பருவத்தில் ஒட்டுமொத்த பருத்தி நுகர்வு 324 லட்சம் பொதிகளாகவும், ஏற்றுமதி 53 லட்சம் பொதிகளாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
 கடந்த பருவத்தில் 69 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில் நடப்பு பருவத்தில் அதன் ஏற்றுமதி 13 லட்சம் பொதிகள் குறையும் என சிஏஐ தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com