சோனாலிகா டிராக்டர் விற்பனை 10.7% அதிகரிப்பு

இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் நிறுவனத்தின் சோனாலிகா டிராக்டர் விற்பனை சென்ற டிசம்பரில் 10.7 சதவீதம் அதிகரித்தது.இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநர் ரமணன் மிட்டல்
சோனாலிகா டிராக்டர் விற்பனை 10.7% அதிகரிப்பு

இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் நிறுவனத்தின் சோனாலிகா டிராக்டர் விற்பனை சென்ற டிசம்பரில் 10.7 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநர் ரமணன் மிட்டல் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
கடந்த ஆண்டில் மழைப்பொழிவு நன்றாக இருந்ததன் காரணமாக கிராமங்களில் டிராக்டர்களுக்கான தேவை சிறப்பான அளவில் அதிகரித்தது. மத்திய அரசு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அதிரடியாக அறிவித்ததையடுத்து, கடந்த 2016 நவம்பரில் டிராக்டர் துறை விற்பனை வளர்ச்சி 13.5 சதவீதம் பின்னடைவைக் கண்டது. 
ஆனால் தற்போது நிலைமை மேம்பட்டு ரொக்கப் பரிவர்த்தனை சகஜ நிலைமைக்கு திரும்பியுள்ளது. மழைப்பொழிவு உள்ளிட்ட இதர காரணிகளும் சாதகமாக இருப்பதையடுத்து விவசாயிகள் மீண்டும் டிராக்டர்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அதன் எதிரொலியாக, சென்ற ஆண்டு டிசம்பரில் சோனாலிகா பிராண்ட் டிராக்டர் விற்பனை 4,516ஆக இருந்தது. கடந்த 2016 டிசம்பரில் விற்பனையான 4,080 டிராக்டர்களுடன் ஒப்பிடுகையில் இது 10.7 சதவீதம் அதிகமாகும்.
இந்தியாவில் டிராக்டர் விற்பனையை பொருத்தவரையில் வளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய நிலையில், 1,000 ஹெக்டேருக்கு 20 டிராக்டர்கள் என்ற அளவில்தான் உள்ளது. சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிக குறைந்த அளவாகும். அதுமட்டுமின்றி இந்தியாவில் 6,70,000 கிராமங்கள் இருப்பதும் இந்த துறைக்கு மிகவும் சாதகமான அம்சம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com