வர்த்தகம்

சென்ற 2017-ஆம் ஆண்டில் பயணிகள் வாகன விற்பனை 30 லட்சம் மைல்கல்லை கடந்து சாதனை

DIN

சென்ற 2017ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்திய சந்தைகளில் பயணிகள் வாகன விற்பனை 30 லட்சம் என்ற மைல்கல்லைத் தாண்டி சாதனை படைத்துள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் துணை தலைமை இயக்குநர் சுகதோ ùஸன் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2017ஆம் ஆண்டில் 32,29,109 பயணிகள் வாகனம் விற்பனையாகியுள்ளது. கடந்த 2016இல் விற்பனையான 29,66,603 வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது 8.85 சதவீத வளர்ச்சியாகும்.
பயணிகள் வாகன பிரிவில், கார் விற்பனை வழக்கமாக முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் கார் விற்பனை 20,62,357 என்ற எண்ணிக்கையிலிருந்து 5.13 சதவீதம் அதிகரித்து 21,68,151ஆனது.
சிறிய அளவில் சுமைகளை ஏற்றிச் செல்லும் டிரக் உள்ளிட்ட யுடிலிட்டி வாகனங்களின் விற்பனை 7,24,522லிருந்து 20.09 சதவீதம் உயர்ந்து 8,70,060ஆக இருந்தது. 
இவைதவிர, இருசக்கர வாகனங்களின் விற்பனையும் சாதனை அளவாக 1,76,86,685 என்ற எண்ணிக்கையிலிருந்து 8.43 சதவீதம் வளர்ச்சிகண்டு 1,91,76,905ஆனது.
உள்நாட்டு சந்தையில் கடந்த 2017இல்தான் முதல் முறையாக பயணிகள் வாகன விற்பனை 32 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இருசக்கர வாகனங்களின் விற்பனையும் கடந்த ஆண்டில்தான் வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் 1.91 கோடியாக உயர்ந்துள்ளது.
வர்த்தக வாகனம், இருசக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய மோட்டார் வாகன விற்பனை சென்ற ஆண்டில் 8.39 சதவீதம் அதிகரித்து 2,37,39,780ஆக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டின் மூன்று காலாண்டுகளிலும் வாகன விற்பனை சூடுபிடித்தே காணப்பட்டது. இதன் எதிரொலியாக, 2017-18 இல் மோட்டார் வாகன விற்பனை 9 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய மதிப்பீட்டில் 7-9 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகன விற்பனை விறுவிறுப்படைந்துள்ளபோதிலும், ஏற்றுமதியைப் பொருத்தவரையில் மந்தநிலையே காணப்படுகிறது.
சென்ற 2017இல் 7,38,894 பயணிகள் வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. கடந்த 2016 ஏற்றுமதியான 7,38,137 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 0.1 சதவீதம் மட்டுமே அதிகம். 
பயணிகள் வாகன ஏற்றுமதி கணிசமான அளவில் அதிகரிக்காததற்கு, ஜிஎஸ்டி 
ரீஃபண்ட் தொகை உரிய நேரத்தில் தரப்படாததே முக்கிய காரணம். இதனால், ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. 
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதிலிருந்து மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு தரப்பட வேண்டிய ரீஃபண்ட் நிலுவை தொகை ரூ.2,000 கோடியை எட்டியுள்ளது. இதில், ஒரு முன்னணி ஏற்றுமதி நிறுவனத்துக்கு மட்டும் ரூ.800 கோடி வரை ரீஃபண்ட் தொகை தரப்பட வேண்டியுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT