பயணிகள் வாகன விற்பனை 10 ஆண்டுகள் காணாத சூடுபிடிப்பு

சென்ற ஜூன் மாதத்தில் உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை 37.54 சதவீதம் அதிகரித்துள்ளது. இது பத்தாண்டுகள் காணாத வளர்ச்சியாகும்.
பயணிகள் வாகன விற்பனை 10 ஆண்டுகள் காணாத சூடுபிடிப்பு

சென்ற ஜூன் மாதத்தில் உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை 37.54 சதவீதம் அதிகரித்துள்ளது. இது பத்தாண்டுகள் காணாத வளர்ச்சியாகும்.
இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கத்தின் தலைமை இயக்குநர் விஷ்ணு மாத்துôர்  செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஜிஎஸ்டி அமலுக்குப் பிறகு விலை குறையும் என்ற எதிர்பார்ப்பால் வாடிக்கையாளர்கள் வாகனங்கள் வாங்கும் திட்டத்தை ஒத்திப் போட்டதால் கடந்த ஆண்டில் மோட்டார் வாகன விற்பனை வளர்ச்சி விகிதம் குறைவாகவே காணப்பட்டது. இந்த நிலையில், சென்ற ஜூன் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 2,73,759-ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 1,99,036 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 37.54 சதவீதம் அதிகமாகும். கடந்த பத்தாண்டுகளுக்குப் பிறகு மாத அளவில் வாகன விற்பனை வளர்ச்சி விகிதம் இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது இதுவே முதல் முறை. இதற்கு முன்பாக, பயணிகள் வாகன விற்பனை கடந்த 2009-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான் 50 சதவீதம் என்ற வளர்ச்சி விகிதத்தை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டில் கார் விற்பனை 1,37,012 என்ற எண்ணிக்கையிலிருந்து 34.21 சதவீதம் உயர்ந்து 1,83,885-ஆக இருந்தது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில் பயணிகள் வாகன விற்பனை 19.91 சதவீதம் வளர்ச்சியடைந்து 7,28,483-லிருந்து 8,73,501-ஆக உயர்ந்துள்ளது.
சென்ற ஜூனில் வாகன விற்பனை சந்தையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகியின் பயணிகள் வாகன விற்பனை 44.4 சதவீதம் அதிகரித்து 1,34,036-ஆக இருந்தது. அதற்கு போட்டியாளராக விளங்கும் ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை 20.79 சதவீதம் உயர்ந்து 45,371-ஆக காணப்பட்டது.
சென்ற ஜூனில் மொத்த இருசக்கர வாகன விற்பனை 22.28 சதவீதம் அதிகரித்து 18,67,884-ஆனது. மோட்டார் சைக்கிள் விற்பனை 24.32 சதவீதம் உயர்ந்து 11,99,332-ஆக காணப்பட்டது. ஸ்கூட்டர் விற்பனை 4,97,478-லிருந்து 20.96 சதவீதம் வளர்ச்சி கண்டு 6,01,761-ஆக இருந்தது.
வர்த்தக வாகனங்கள் விற்பனை 41.72 சதவீதம் உயர்ந்து 80,624-ஆக காணப்பட்டது.
முதல் காலாண்டில் அனைத்து வகையான மோட்டார் வாகன விற்பனையும் 18.01 சதவீதம் அதிகரித்து 69,42,612-ஆக இருந்தது. ஏற்றுமதி 26.73 சதவீதம் வளர்ச்சியடைந்து 11,94,627-ஆக காணப்பட்டது. 
வட்டி விகிதத்தில் கடுமை, பொருள்களின் விலை அதிகரிப்பு ஆகியவை இனி வரும் மாதங்களில் பயணிகள் வாகன விற்பனைக்கு மிகப்பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், புதிய மாடல்களின் அறிமுகம் விற்பனை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு, சாதகமான பருவநிலையால் இருசக்கர வாகனங்களுக்கான தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், மத்திய அரசு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதால் வர்த்தக வாகன விற்பனையும் சூடுபிடிக்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com