அந்நியச் செலாவணி கையிருப்பு 40,581 கோடி டாலராக சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 24.82 கோடி டாலர் (ரூ.1,613 கோடி) குறைந்து 40,581 கோடி டாலராக (ரூ.26.38 லட்சம் கோடி) இருந்தது என ரிசர்வ் வங்கி
அந்நியச் செலாவணி கையிருப்பு 40,581 கோடி டாலராக சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 24.82 கோடி டாலர் (ரூ.1,613 கோடி) குறைந்து 40,581 கோடி டாலராக (ரூ.26.38 லட்சம் கோடி) இருந்தது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில், செலாவணி கையிருப்பு 176 கோடி டாலர் வீழ்ச்சியடைந்து 40,606 கோடி டாலராக காணப்பட்டது. 
ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்ட அந்நியச் செலாவணி சொத்துமதிப்பு 7.39 கோடி டாலர் உயர்ந்து 38,079 கோடி டாலராக இருந்தது. 
அதேசமயம், தங்கத்தின் கையிருப்பு 33 கோடி டாலர் சரிந்து 2,104 கோடி டாலராக காணப்பட்டது. எஸ்.டி.ஆர். 29 லட்சம் டாலர் உயர்ந்து 149 கோடி டாலராகவும், சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணி கையிருப்பு 49 லட்சம் டாலர் அதிகரித்து 249 கோடி டாலராகவும் இருந்தது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com