வர்த்தகம்

மின்சார வாகனங்களை சென்னை ஆலையில் தயாரிக்க ஹுண்டாய் நிறுவனம் திட்டம்

DIN

ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் மின்சார வாகனங்களை அதன் சென்னை ஆலையில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. 
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஒய்.கே. கூ தெரிவித்ததாவது:
நடப்பாண்டு முதல் வரும் 2020-ஆண்டுக்குள்ளாக எலக்ட்ரிக் எஸ்யுவி உள்ளிட்ட எட்டு வகையான மின்சார கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு அதற்காக தீவிரமாக பணியாற்றி வருகிறோம். வரும் 2019-ஆம் ஆண்டு இரண்டாம் பிற்பகுதியில் இந்த வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார கார்களுக்கான பாகங்களை முழுவதுமாக இறக்குமதி செய்து அதனை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம். சென்னை ஆலையில் மின்சார வாகனங்களை உருவாக்கும் திட்டம் உள்ளது. 
இந்தியாவில் செயல்பாடுகளைத் தொடங்கி 20 ஆண்டுகள் ஆன நிலையில் 80 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளோம். வரும் 2021-ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்குள் 1 கோடி வாகனங்களை தாண்டும் இலக்கையும் நிர்ணயித்துள்ளோம்.
2018-2020-க்குள் எட்டு புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டுமெனில், தற்போது ஆண்டுக்கு 7 லட்சமாக உள்ள சென்னை ஆலையின் உற்பத்தி திறனை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 7.5 லட்சமாக அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நீண்ட கால அளவில் மின்சார வாகன தயாரிப்பில் சென்னை ஆலையை சர்வதேச மையமாக உருவெடுக்க செய்வதே எங்களின் முதல் திட்டம். 
மின்சார சொகுசு கார்கள் முதற்கட்டமாக இந்தியாவின் 15 நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும். மின்சார கார்களின் விலை மற்றும் அவற்றின் விற்பனை இலக்கு ஆகியவற்றை நிர்ணயிக்கும் பணி தற்போது இறுதிகட்டத்தில் உள்ளது. 
மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT