வர்த்தகம்

இந்தியாவில் உற்பத்தியாகும் 90% பால் பாதுகாப்பானதே: எப்எஸ்எஸ்ஏஐ

DIN


இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பால் உற்பத்தியில் 90 சதவீதம் பாதுகாப்பானதே என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி பவன் அகர்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது: 
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தேசிய பால் தர ஆய்வில் 6,432 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவை சில அளவுகோல்களின் அடிப்படையில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.
ஆய்வின் முடிவில், 10 சதவீதத்துக்கும் குறைவான (638 மாதிரிகள்) பால் மாதிரிகள் மட்டுமே உடலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் இருப்பது கண்டறியப்பட்டது. 
இதற்கு, பண்ணைகளில் காணப்படும் சுகாதார குறைவு, மாடுகளுக்கு தரப்படும் உணவில் தரமில்லாத தன்மை ஆகியவையே முக்கிய காரணம் என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோன்று, 6,432 மாதிரிகளில் 12-இல் மட்டுமே கலப்படம் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, அதில், தாவர எண்ணெய், டிடர்ஜெண்ட், குளுகோஸ், யூரியா மற்றும் அமோனியம் சல்பேட் ஆகிய 13 கலப்படப் பொருள்கள் கலந்திருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. ஆனால், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 90 சதவீத பால் பாதுகாப்பு நிறைந்ததாகவே உள்ளது.
எப்எஸ்எஸ்ஏஐ மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் சம்மந்தப்பட்ட நபர்களிடமும், மாநில அரசுகளிடமும் பகிர்ந்து கொள்ளப்படும். முன்னெச்சரிக்கை ஏற்பாடு மற்றும் தவறை சரி செய்வதன் மூலம் இந்திய பாலின் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
நாட்டின் எந்தப் பகுதியிலிருந்து ஆய்வுக்கு எடுக்கப்பட்ட பாலின் மாதிரிகளில் கலப்படங்கள் செய்யப்பட்டிருந்தன என்பது குறித்து பவன் அகர்வால் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT