வர்த்தகம்

வீல்ஸ் இந்தியா லாபம் ரூ.40 கோடி

DIN


டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த வீல்ஸ் இந்தியா நிறுவனம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் ரூ.40.7 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2018-19 நிதியாண்டின் முதல் அரையாண்டு (ஏப்ரல்-செப்டம்பர்) காலத்தில் ரூ.1,542.1 கோடி வருவாய் ஈட்டியது. இது, கடந்த நிதியாண்டில் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.1,216.3 கோடியுடன் ஒப்பிடுகையில் 27 சதவீதம் அதிகம்.
நிகர லாபம் ரூ.39.4 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.40.7 கோடியாக காணப்பட்டது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் வருவாய் ரூ.795.8 கோடியாகவும், நிகர லாபம் ரூ.22.7 கோடியாகவும் இருந்தது என வீல்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT