வர்த்தகம்

ஹோண்டா: ஸ்கூட்டர் விற்பனை 2.5 கோடியைத் தாண்டி சாதனை

DIN

ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஸ்கூட்டர் விற்பனை 2.5 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்)  யாவீந்தர் சிங் குலேரியா திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் தனது முதல் மாடல் ஸ்கூட்டரை கடந்த 2001-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், 13 ஆண்டுகளில் நிறுவனத்தின் ஸ்கூட்டர் விற்பனை 1 கோடியைத் தாண்டியது. அதேசமயம், வெறும் மூன்றே ஆண்டுகளில் கூடுதலாக 1 கோடி ஸ்கூட்டர்களை விற்று ஹோண்டா பெருமை தேடிக் கொண்டது.
தற்போது அந்த சாதனைகளை முறியடிக்கும் வகையில் ஒரே ஆண்டுக்குள் அடுத்த 50 லட்சம் ஸ்கூட்டர்களை விற்று சாதனை புரிந்துள்ளது.
இதையடுத்து, ஹோண்டா நிறுவனத்தின் மொத்த ஸ்கூட்டர்கள் விற்பனை 2.5 கோடி என்ற மைல் கல்லைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இதற்கு, வாடிக்கையாளர்கள் எங்கம் மீது வைத்திருக்கும் பற்றும், நம்பிக்கையுமே முக்கிய காரணம். இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் ஸ்கூட்டர்கள் விற்பனையை அதிகரிக்கும் வகையில் நிறுவனம் ஏற்கெனவே நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது என்றார் அவர்.
ஸ்கூட்டர் விற்பனை சந்தையில் ஹோண்டா 57 சதவீத பங்களிப்புடன் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், கிளிக், ஆக்டிவா மற்றும் கிரேஸியா மாடல் ஸ்கூட்டர்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT