வர்த்தகம்

மெர்சிடிஸ்-பென்ஸின் புதிய "ஜி63' கார் அறிமுகம்

DIN

ஜெர்மனியைச் சேர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம்,  "ஏஎம்ஜி ஜி 63' என்ற புதிய ரக சொகுசுக் காரை இந்திய சந்தையில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் (விற்பனை-சந்தைப்படுத்துதல்) மைக்கேல் ஜாப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இப்புதிய ஜி63 காரில் 4-லிட்டர் வி8 பைடர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 585 ஹைச்பி திறன் கொண்டது. அதன் மூலம், 100 கி.மீ. முதல் 220 கி.மீ. வேகத்தை 4.5 நொடிகளில் எட்ட முடியும்.
கரடு முரடான பாதைகளில் செல்லக்கூடிய ஸ்போர்ட்ஸ் கார் செயல்பாட்டை விரும்புவர்களுக்கு, ஜி63  ஒரு வரப்பிரசாதமாகும். இதன் விலை ரூ.2.19 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பண்டிகை காலம் வரவிருப்பதையடுத்து நிறுவனம் இதுபோன்ற புதுமையான கார்களின் அறிமுகத்தை தொடர்ந்து மேற்கொள்ளும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT