டாக்டர் ரெட்டீஸ் லாபம் ரூ.504 கோடி

டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் ரூ.504 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
டாக்டர் ரெட்டீஸ் லாபம் ரூ.504 கோடி

டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் ரூ.504 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: அந்நியச் செலாவணி மாற்று விகிதத்தில் கிடைத்த ஆதாயம் உள்ளிட்ட காரணங்களால் நிறுவனத்தின் வர்த்தகம் சிறப்பான அளவில் மேம்பட்டுள்ளது. அதன்படி கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.3,546 கோடியாக காணப்பட்ட வருவாய் நடப்பு நிதியாண்டில் இதே கால அளவில் 7 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.3,798 கோடியாகி உள்ளது.
நிகர லாபம் ரூ.285 கோடியிலிருந்து 77 சதவீதம் அதிகரித்து ரூ.504 கோடியாக காணப்பட்டது. குறிப்பாக, வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் கிடைத்த வருவாயானது 37 சதவீதம் உயர்ந்து ரூ.750 கோடியாக இருந்தது என டாக்டர் ரெட்டீஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com