சர்க்கரை உற்பத்தி 3.15 கோடி டன்னாக குறையும்

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி நடப்பு சந்தைப் பருவத்தில் 3.15 கோடி டன்னாக குறையும் என இந்திய சர்க்கரை ஆலைககள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 


இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி நடப்பு சந்தைப் பருவத்தில் 3.15 கோடி டன்னாக குறையும் என இந்திய சர்க்கரை ஆலைககள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அந்த கூட்டமைப்பு திங்கள்கிழமை மேலும் கூறியதாவது: இம்மாதத்தில் தொடங்கிய 2018-19 சந்தைப் (அக்.,-செப்.,) பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 3.5 கோடி டன்னாக இருக்கும் என கடந்த ஜூலையில் சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு மதிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில், பருவம் தவறிய மழை, பூச்சி தாக்குதல் போன்ற காரணங்களால் சர்க்கரை 
உற்பத்தி 3 சதவீதம் குறைந்து 3.15 கோடி டன்னாக மட்டுமே இருக்கும் என தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கரும்பு சாகுபடி அதிகமாக பாதிப்புக்குள்ளானதே முக்கிய காரணம்.
2018-19 காலத்தில் சர்க்கரை இருப்பு 4.27 கோடி டன்னாக இருக்கும். 
அதேசமயம், உள்நாட்டில் அதற்கான தேவை 2.5-2.6 கோடி டன் என்ற அளவிலேயே காணப்படும். சர்க்கரை ஆலைகள் 40-50 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்தால் கூட கையிருப்பானது 1.1-1.3 கோடி டன் என்ற கணிசமான அளவிலேயே காணப்படும் என்று சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com