ரானே ஹோல்டிங்ஸ் லாபம் ரூ.33 கோடி

ரானே குழுமத்தைச் சேர்ந்த ரானே ஹோல்டிங்ஸ் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.33.86 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.


ரானே குழுமத்தைச் சேர்ந்த ரானே ஹோல்டிங்ஸ் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.33.86 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அந்த நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான எல்.கணேஷ் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.647.89 கோடியாக இருந்தது. 
கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் ஈட்டிய வருவாய் ரூ.562.03 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்.
நிகர லாபம் ரூ.37.50 கோடியிலிருந்து குறைந்து ரூ.33.86 கோடியாகியுள்ளது.
செப்டம்பர் 30-உடன் முடிவடைந்த அரையாண்டில் மொத்த வருவாய் ரூ.1,100.64 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,290.56 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.73.48 கோடியிலிருந்து குறைந்து ரூ.66.52 கோடியானது.
இந்திய பயணிகள் வாகன சந்தையில் தேவைக்கான சூழல் நிச்சயமற்ற நிலையில் காணப்படுகிறது. அதேசமயம், வர்த்தக வாகன பிரிவில் தேவையானது தொடர்ந்து சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com