இணைப்பு நடவடிக்கை நிறைவு: மிகப் பெரிய நிறுவனமானது வோடபோன் - ஐடியா

ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைகள் முழுமையடைந்ததாக வெள்ளிக்கிழமை அந்நிறுவனங்கள் கூட்டாக அறிவித்தன.
இணைப்பு நடவடிக்கை நிறைவு: மிகப் பெரிய நிறுவனமானது வோடபோன் - ஐடியா


ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைகள் முழுமையடைந்ததாக வெள்ளிக்கிழமை அந்நிறுவனங்கள் கூட்டாக அறிவித்தன. இந்த இணைப்பையடுத்து புதிததாக உருவாகியுள்ள நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. 
ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களின் இணைப்பானது 2,320 கோடி டாலர் மதிப்பிலானதாகும். இந்திய மதிப்பில் இது ரூ.1.60 லட்சம் கோடியாகும். தற்போது, இந்த இரண்டு நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைகள் முழுமையடைந்து இரு நிறுவனங்களும் ஒன்றாகியுள்ளன. 
இணைப்பு பிறகான உதயமான நிறுவனத்துக்கு வோடபோன் ஐடியா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 
இப்புதிய நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவையைப் பெறும் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 40.8 கோடியாக இருக்கும். ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு சேவை சந்தை பங்களிப்பில் இது 35 சதவீதமாகும்.
அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைப் பெற்று செல்லிடப்பேசி சேவை வழங்குவதில் பார்தி ஏர்டெல் நிறுவனமே முதலிடத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில், இணைப்பின் காரணமாக புதிதாக உருவாகியுள்ள வோடபோன் ஐடியா நிறுவனம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் ஏர்டெல் நிறுவனத்தை விஞ்சியுள்ளது. மேலும், இது ரிலையன்ஸ் ஜியோவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஐடியா செல்லுலாரின் தலைவராக இருப்பவர் குமார் மங்கலம் பிர்லா. இவர்தான் தற்போது இணைப்பில் உருவாகும் புதிய நிறுவனத்துக்கும் தலைவராக இருப்பார். இந்நிறுவனத்துக்கு 12 உறுப்பினர்களைக் கொண்ட இயக்குநர் குழுவும் இருக்கும். தலைமை நிதி அதிகாரி வோடபோன் சார்பில் நியமிக்கப்படுவார்.
வேடாபோன்-ஐடியா இணைந்து புதிய நிறுவனத்துக்கு தலைமைச் செயல் அதிகாரியாக பாலேஷ் சர்மாவை தேர்ந்தெடுத்துள்ளன.
வோடபோன்-ஐடியா இணைப்பு என்பது நிறுவன உலகில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. இந்த நடவடிக்கை இத்துறையில் ஆரோக்கியமான போட்டி ஏற்பட வழிவகுக்கும் என்று மத்திய தொலைத் தொடர்பு செயலர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com