வர்த்தகம்

தங்கம் பவுனுக்கு ரூ.72 குறைவு

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.23,080-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதாரச் சூழல்,  உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான  இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக்காரணிகளாக உள்ளன.
சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி,  ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.9 குறைந்து, ரூ.2,885-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.40 ஆகவும்,  கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.40,000 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்      2,885
1 பவுன் தங்கம்      23,080
1 கிராம் வெள்ளி      40.00
1 கிலோ வெள்ளி     40,000

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்      2,894
1 பவுன் தங்கம்      23,152
1 கிராம் வெள்ளி      40.40
1 கிலோ வெள்ளி      40,400
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT