சனிக்கிழமை 17 நவம்பர் 2018

டாடா மோட்டார்ஸ் சர்வதேச விற்பனை 14% அதிகரிப்பு

DIN | Published: 11th September 2018 01:00 AM


டாடா மோட்டார் நிறுவனத்தின் சர்வதேச விற்பனை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) உள்ளிட்ட 1,07,030 வாகனங்கள் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டன. 
டாடா மோட்டார்ஸின் வர்த்தக வாகனம் மற்றும் டாடா தேவூ வாகனங்களின் விற்பனை 29 சதவீதம் அதிகரித்து 45,719-ஆக இருந்தது. 
சர்வதேச சந்தையில் பயணிகள் வாகன விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 4 சதவீதம் வளர்ச்சி கண்டு 61,328-ஆக இருந்தது. 
ஜேஎல்ஆர் விற்பனை 42,658-ஆக இருந்தது. இதில், ஜாகுவார்விற்பனை 14,209-ஆகவும், லேண்ட் ரோவர் விற்பனை 28,449-ஆகவும் இருந்தது என டாடா மோட்டார்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

More from the section

நிலக்கரி உற்பத்தி 37 கோடி டன்னாக அதிகரிப்பு
ஜெட் ஏர்வேஸை கையகப்படுத்துவது உறுதியில்லை: டாடா சன்ஸ்
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லாபம் ரூ.127 கோடி
பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பு 18% சரிவு
மெர்சிடிஸ் பென்ஸ்: புதிய கார் அறிமுகம்