சனிக்கிழமை 17 நவம்பர் 2018

30 லட்சம் அப்பாச்சி பைக்குகள் விற்பனை: டிவிஎஸ்

DIN | Published: 11th September 2018 01:03 AM


இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், 30 லட்சம் அப்பாச்சி பைக்குகளை விற்பனை செய்துள்ளதாக திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கே.என். ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 
கடந்த 2005-ஆம் ஆண்டு அப்பாச்சி பைக் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் பைக்குகள் அனைத்தும் ஓசூர் ஆலையிலேயே தயாரிக்கப்படுகின்றன. 
அப்பாச்சி விற்பனை 30 லட்சம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனைக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். அவர்களால் தான் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், அப்பாச்சி பிரீமியம் பிரிவில் 160சிசி, ஆர்ஆர் 310சிசி உள்ளிட்ட மாடல்களில் பைக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
 

More from the section

ஜெட் ஏர்வேஸை வாங்குவது குறித்து டாடா சன்ஸ் இன்று முடிவு?
இந்தியாவின் ஏற்றுமதி 17.86% அதிகரிப்பு
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஜிஐசி பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்
3 புதிய மாடல்களில் மீண்டும் ஜாவா பைக்
வீல்ஸ் இந்தியா லாபம் ரூ.40 கோடி