வெள்ளிக்கிழமை 16 நவம்பர் 2018

ரூபாய் மதிப்பு மேலும் 24 காசுகள் இழப்பு

DIN | Published: 12th September 2018 12:58 AM

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு செவ்வாய்க்கிழமை மேலும் 24 காசுகள் சரிவைக் கண்டது.
உலக நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் பதற்றம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, உள்நாட்டிலிருந்து அதிகளவில் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக கடந்த சில வாரங்களாக ரூபாய் மதிப்பு தொடர் சரிவைக் கண்டு வருகிறது.
அந்த வகையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி சந்தையிலும் ரூபாய் மதிப்பானது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ரூபாய் மதிப்பு 72.25-ஆக சாதகமான நிலையில் காணப்பட்டது. ஆனால், இந்த மகிழ்ச்சியானது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. திடீரென ரூபாய் மதிப்பு 72.74-க்கு சென்றது. 
முந்தைய தினத்துடன் ஒப்பிடுகையில் செவ்வாய்க்கிழமை ரூபாய் மதிப்பு 24 காசுகள் சரிவடைந்து 72.69 என்ற புதிய வரலாற்று வீழ்ச்சியளவைத் தொட்டது.
 

More from the section

ஜெட் ஏர்வேஸை வாங்குவது குறித்து டாடா சன்ஸ் இன்று முடிவு?
இந்தியாவின் ஏற்றுமதி 17.86% அதிகரிப்பு
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஜிஐசி பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்
3 புதிய மாடல்களில் மீண்டும் ஜாவா பைக்
வீல்ஸ் இந்தியா லாபம் ரூ.40 கோடி