தங்க இ.டி.எஃப். திட்டங்களுக்கு குறைந்தது வரவேற்பு

தங்க இ.டி.எஃப். திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் குறைந்து வருவதை எடுத்துக் காட்டும் வகையில் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் அத்தகைய திட்டங்களிலிருந்து ரூ.45 கோடி
தங்க இ.டி.எஃப். திட்டங்களுக்கு குறைந்தது வரவேற்பு

தங்க இ.டி.எஃப். திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் குறைந்து வருவதை எடுத்துக் காட்டும் வகையில் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் அத்தகைய திட்டங்களிலிருந்து ரூ.45 கோடி வெளியேறியுள்ளது. இதற்கு, பங்கு சார்ந்த திட்டங்களுக்கு வரவேற்பு பெருகி வருவதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 
நடப்பு 2018-19 நிதியாண்டில் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் தங்க இ.டி.எஃப். திட்டங்களிலிருந்து மொத்தம் ரூ.241 கோடி வெளியேறியுள்ளது.
அதையடுத்து, தங்க நிதி திட்டங்களில் பரஸ்பர நிதியங்கள் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பானது 7.5 சதவீதம் சரிவடைந்து ரூ.4,445 கோடியாகியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தங்க இ.டி.எஃப். திட்டங்கள் மீதான கவர்ச்சி முதலீட்டாளர்களுக்கு குறைந்து வருகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், அந்த வகை திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள் வெளியே எடுத்த தொகை 2013-14-இல் ரூ.2,293 கோடியாகவும், 2014-15-இல் ரூ.1,475 கோடியாகவும், 2015-16 இல் ரூ.903 கோடியாகவும், 2016-17 இல் ரூ.775 கோடியாகவும், 2017-18-இல் ரூ.835 கோடியாகவும் இருந்தன.
அதேசமயம், முதலீட்டாளர்கள் கடந்த 2012-13-இல் தங்க இ.டி.எஃப். திட்டங்களில் ரூ.1,414 கோடியை முதலீடு செய்ததாக இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com