சமையல் எண்ணெய் இறக்குமதி விறுவிறு

இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்தது.
சமையல் எண்ணெய் இறக்குமதி விறுவிறு


இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
ரூபாய் மதிப்பு சரிவடைந்த நிலையிலும் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 15.12 லட்சம் டன்னாகியது. கடந்தாண்டு இதே கால அளவு இறக்குமதியான 13.61 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் இது 11 சதவீதம் அதிகமாகும்.
குறிப்பாக, பாமாயில் இறக்குமதி 6 சதவீதம் அதிகரித்து 8,68,744 டன்னிலிருந்து 9,20,894 டன்னாகியது. 
மொத்த பாமாயில் இறக்குமதியில், கச்சா பாமாயில் இறக்குமதி 6,00,019 டன்னிலிருந்து அதிகரித்து 6,49,570 டன்னாகவும், கச்சா கெர்னல் ஆயில் இறக்குமதி 4,600 டன்னிலிருந்து உயர்ந்து 12,762 டன்னாகவும் ஆனது.
அதேசமயம், ஆர்பிடி பாமாயில் இறக்குமதி 2,64,125 டன்னிலிருந்து சரிந்து 2,58,562 டன் ஆனது. மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் பாமாயிலின் பங்களிப்பானது 60 சதவீதத்துக்கும் மேல் உள்ளது.
பாமாயில் தவிர, ஸாஃப்ட் ஆயில் இறக்குமதி 4,68,181 டன்னிலிருந்து அதிகரித்து 5,44,700 டன் ஆனது. ஸாஃப்ட் ஆயில் இறக்குமதியில் சோயா எண்ணெய் இறக்குமதி 2,89,746 டன்னிலிருந்து அதிகரித்து 3,12,049 டன்னாகவும், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 1,33,396 டன்னிலிருந்து உயர்ந்து 2,08,142 டன்னாகவும் காணப்பட்டன. 
கடந்தாண்டு நவம்பர் முதல் நடப்பாண்டு ஆகஸ்ட் வரையில் ஏற்கெனவே 122.78 லட்சம் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு விட்டது என்று அந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com