வர்த்தகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 40,000 கோடி டாலருக்கும் கீழ் சரிவு

தினமணி

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஓராண்டில் முதல் முறையாக 40,000 கோடி ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.26.50 லட்சம் கோடி) டாலருக்கும் கீழ் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
 அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 82 கோடி டாலர் குறைந்து 39,928 கோடி டாலராக இருந்தது. இதையடுத்து தொடர்ந்து இரண்டாவது வாரமாக அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து போனது.
 இதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 119.1 கோடி டாலர் சரிந்து 40,010 கோடி டாலராக காணப்பட்டது.
 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கி அதிக அளவில் டாலரை விற்பனை செய்து வருகிறது. கடந்த வாரத்தில் ரூபாய் மதிப்பு கடந்த வாரத்தில் 73 வரை வீழ்ச்சியடைந்தது. அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 71.84-ஆக நிறைவு பெற்றது.
 செப்டம்பர் 7-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கியப் பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 88.74 கோடி டாலர் குறைந்து 37,509 கோடி டாலராக இருந்தது.
 அதேசமயம், தங்கத்தின் கையிருப்பு 7.19 கோடி டாலர் அதிகரித்து 2,023 கோடி டாலராக காணப்பட்டது. ஆனால், சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் மதிப்பு 15 லட்சம் டாலர் குறைந்து 147.6 கோடி டாலராகவும், நம்நாடு வைத்துள்ள கையிருப்பு 25 லட்சம் டாலர் குறைந்து 247.4 கோடி டாலராகவும் இருந்தது என ரிசர்வ் வங்கி அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT