தங்கம் இறக்குமதிக்கான வரியை உயர்த்த வாய்ப்பில்லை'

தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்காக அதற்கான சுங்க வரி உயர்த்தப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது.


தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்காக அதற்கான சுங்க வரி உயர்த்தப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்தவும், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருவதை கட்டுக்குள் கொண்டு வரவும் மத்திய அரசு பல்வேறு கொள்கை முடிவுகளை எடுத்து செயல்படுத்த தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தங்கத்தின் இறக்குமதியை கணிசமாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த அதற்கான இறக்குமதி வரியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளதாகவே கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, அதன் இறக்குமதியை குறைக்க சில வகையான கொள்கை முடிவுகளை மட்டுமே அரசு சார்பில் செயல்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
பண்டிகை காலம் நெருங்கி வருவதால் தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தினால் அது கடத்தல் நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, மத்திய அரசு இதுபோன்ற திட்டத்தை மேற்கொள்ளவுள்ளது. 
மேலும், மின்னணுப் பொருள்கள், தகவல் தொழில்நுட்பத் தயாரிப்புகளுக்கான வரிகளை உயர்த்துவதற்கு முன்பாக அந்தந்த துறை சார்ந்த அமைச்சகங்களுடன் நிதி அமைச்சகம் ஆலோசனை நடத்த உள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com