மூன்று வங்கிகளை இணைத்து உருவாக்கப்படும் புதிய நிறுவனம் அடுத்த நிதியாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும்'

மூன்று பொதுத் துறை வங்கிகளை இணைத்து உருவாக்கப்படும் புதிய நிறுவனம் அடுத்த நிதியாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
மூன்று வங்கிகளை இணைத்து உருவாக்கப்படும் புதிய நிறுவனம் அடுத்த நிதியாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும்'


மூன்று பொதுத் துறை வங்கிகளை இணைத்து உருவாக்கப்படும் புதிய நிறுவனம் அடுத்த நிதியாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பேங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய மூன்று வங்கிகள் இணைவதற்கான பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்கொண்டு, தேவையான ஒழுங்காற்று நடைமுறைகள் 2018-19-ஆம் நிதி ஆண்டுக்குள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, மூன்று வங்கிகளையும் இணைத்து உருவாக்கப்படும் புதிய நிறுவனம் வரும் 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வரும்.
இம்மாதம் நடைபெறவுள்ள வங்கிகளின் நிர்வாக குழு கூட்டத்தில், பங்கு பரிமாற்ற விகிதம், முதலீட்டாளர்களிடமிருந்து தேவைப்படக்கூடிய மூலதனம் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு இணைப்புக்கான திட்டங்கள் உருவாக்கப்படும் என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
கடந்த திங்கள்கிழமை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் நடைபெற்ற மாற்று வழிமுறை' ஆலோசனை கூட்டத்தில் பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று பொதுத் துறை வங்கிகளை இணைத்து புதிய நிறுவனத்தை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. வங்கிகளின் வலிமையான மற்றும் நீடித்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த முடிவை எடுத்தது. புதிய நிறுவனத்துக்கு தேவையான மூலதன ஆதரவு வழங்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது. 
இந்த மூன்று வங்கிகளும் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம் அவற்றின் கடன் வழங்கும் திறன் மற்றும் வாடிக்கையாளர் சேவை சிறப்பான அளவில் மேம்படுவதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
மூன்று வங்கிகள் இணைப்பால் உருவாக்கப்படும் புதிய நிறுவனம், ரூ.14.82 லட்சம் கோடி வர்த்தகத்தைக் கொண்டதாக இருக்கும். எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகளுக்கு அடுத்தபடியாக, நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியாக அது விளங்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com