வர்த்தகம்

பால் பொருள்கள் ஏற்றுமதிக்கு கூடுதல் வரிச் சலுகை

DIN


பால் பொருள்கள் ஏற்றுமதிக்கு வரி சலுகைகளை மீண்டும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
உலக நாடுகளுக்கான ஏற்றுமதியை ஊக்குவிக்க எம்இஐஎஸ்' (இந்திய திட்டத்திலிருந்து பொருள்கள் ஏற்றுமதி) திட்டத்தின் கீழ் வரி சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை மாதத்தில், வேளாண் மற்றும் பால்பண்ணைத் துறைப் பொருள்களின் ஏற்றுமதிக்கு 10 சதவீத வரி சலுகையை மத்திய அரசு அளித்தது.
இந்த நிலையில், அதே திட்டத்தின் கீழ் ஏற்றுமதி செய்யப்படும் பால் மற்றும் குறிப்பிட்ட பால் பொருள்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக வரி சலுகையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அதுபோன்ற பொருள்களுக்கு 10 சதவீதமாக உள்ள தற்போதைய வரி சலுகையை 20 சதவீதமாக அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை நான்கு மாதங்களுக்கு அடுத்தாண்டு ஜனவரி 12 வரையில் நீடிக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிக்கையை வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) விரைவில் வெளியிடும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
தற்போது வழங்கப்படவுள்ள இந்த வரி சலுகையின் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.21.40 கோடி செலவாகும். 
மத்திய அரசின் இந்த முடிவையடுத்து, இந்தியாவிலிருந்து அந்நிய சந்தைகளுக்கு ஏற்றுமதியாகும் பால், குழந்தைகளுக்கான பால் பொருள்கள், பாலாடைக்கட்டி, தயிர், வெண்ணெய், மோர் உள்ளிட்ட 28 வகையான பொருள்களுக்கு கூடுதல் வரி சலுகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT