வர்த்தகம்

சென்செக்ஸ் 347 புள்ளிகள் அதிகரிப்பு

DIN


இந்திய பங்குச் சந்தைகள் ஐந்து நாள்கள் சரிவிலிருந்து செவ்வாய்க்கிழமை மீண்டன.
பங்கு வர்த்தகத்தின் தொடக்கத்தில் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் நிலவியது. இருப்பினும், வர்த்தகத்தின் பிற்பகுதியில் முதலீட்டாளர்கள் நிதி, மருந்து, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறை பங்குகளை வாங்கி குவித்ததையடுத்து சந்தைகள் திடீர் உற்சாகம் பெற்றது. ரூபாய் மதிப்பு தொடர் சரிவை கண்டு வரும் நிலையில் ஒரு சில முதலீட்டாளர்கள் தங்களது கவனத்தை ஏற்றுமதி துறை சார்ந்த பங்குகளில் திருப்பினர். 
மேலும், நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஐஎல் அண்டு எஃப்எஸ் நிறுவனத்தை அப்படியே விட்டு விடமாட்டோம். அதனை மீட்டுக் கொண்டு வரும் வழிமுறைகளைக் காண்போம் என எல்ஐசி தலைவர் வி.கே.சர்மா பேசியது பங்குச் சந்தைகளுக்கு புதிய தெம்பை கொடுத்தது. 
இதன் காரணமாக, கோட்டக், எஸ்பிஐ, இன்டஸ்இண்ட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி பங்குகள் சரிவிலிருந்து மீண்டு அதிக விலைக்கு கைமாறின. குறிப்பாக, ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் அதிகபட்சமாக 2.96 சதவீதம் ஏற்றம் கண்டன. இதைத் தொடர்ந்து ஹெச்டிஎஃப்சி பங்கின் விலை 2.95 சதவீதம் உயர்ந்தது. 
அதேசமயம், நிர்வாக குழு கூட்டத்தையொட்டி யெஸ் வங்கி பங்குகள் 2.83 சதவீதம் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 347 புள்ளிகள் அதிகரித்து 36,652 புள்ளிகளில் நிறைவடைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 100 புள்ளிகள் உயர்ந்து 11,067 புள்ளிகளில் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT