வர்த்தகம்

மாருதி சுஸூகியின் புதிய ஆல்டோ கார் அறிமுகம்

DIN

மாருதி சுஸூகி இந்தியாவின் புதிய ஆல்டோ 800 கார் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. 
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மூத்த செயல் இயக்குநர் (சந்தைப்படுத்துதல் & விற்பனை) ஆர்எஸ். கல்சி கூறியதாவது:
நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட புதிய ஆல்டோ 800 காரில் பிஎஸ்-6 மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையிலான என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. புதிய வடிவமைப்பில் வெளிவந்துள்ள இந்த ஆல்டோ காரில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது, வரவிருக்கும் விபத்து மற்றும் பாதசாரி விதிமுறைகளுக்கு இணக்கமானதாக இருக்கும்.
மேலும், இப்புதிய மாடல் ஆல்டோ கார்,  ஆன்டி-லாக் பிரேகிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) மற்றும் எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்டிரிபியூஷன் சிஸ்டம் (இபிடி) வசதிகளுடன் வெளிவந்துள்ளது.
இவைதவிர, இதர பாதுகாப்பு அம்சங்களான ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஓட்டுநர் காற்றுப் பை, வேக அலாரம் கருவி, சீட் பெல்ட் நினைவூட்டும் கருவி உள்ளிட்ட வசதிகளும் இப்புதிய ஆல்டோவில் இடம்பெற்றுள்ளன. மாடல்களுக்கு ஏற்ப இவற்றின் விலை ரூ.2.93 லட்சம் முதல் ரூ.3.71 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  இந்திய கார் பயன்பாட்டாளர்களின் பெருமை மிக்க அடையாளமாக ஆல்டோ உள்ளது. அதன் காரணமாகவே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் கடந்த 15 ஆண்டுகளில் ஆல்டோ முன்னிலையில் உள்ளது.
கடந்த 2000-ஆம் ஆண்டில் ஆல்டோ அறிமுகமானது முதல் இதுவரையில் அதன் ஒட்டுமொத்த விற்பனை 37 லட்சத்தை தாண்டியுள்ளதே இதற்கு சான்று. முதல் முறை கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களில் 58 சதவீதம் பேர் ஆல்டோ காரையே தேர்வு செய்கின்றனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT