"புதிய தேசிய இணைய வணிக கொள்கை அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும்'

தேசிய இணைய வணிக கொள்கைக்கான வரைவு மசோதா ஆன்லைன் வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய இணைய வணிக கொள்கைக்கான வரைவு மசோதா ஆன்லைன் வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய வணிகத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தேசிய இணைய வணிக கொள்கை வரைவு மசோதாவை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது. அதில், இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு பல்வேறு நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

புதிய இணைய வணிக வரைவு மசோதாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும்  விற்பனையாளர்களின் விவரங்களை தங்களுடைய வலைதளத்தில் கட்டாயம் வெளியிடவேண்டும். இது, அனைத்து வகையான பொருள்களுக்கும் பொருந்தும். குறிப்பாக விற்பனையாளர்களின் முகவரி,  மின்னஞ்சல், தொலைபேசி எண் உள்ளிட்ட தொடர்புக்கான விவரங்கள் அனைத்தும் வலைதளத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

தரமான, உண்மையான பொருள்களையே வலைதளத்தின் மூலமாக அவர்கள் விற்பனை செய்ய வேண்டும். இதற்காக, வர்த்தக முத்திரைகளை பதிவு செய்துகொள்ளவும் அவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் போலியான பொருள்களை வர்த்தகம் செய்தால் அதனை தடுக்கும் வழிமுைறகளும் புதிய இணைய வணிக கொள்கை வரைவில் இடம்பெற்றுள்ளன.

இவைதவிர, இணைய வணிக நிறுவனங்கள் தங்களுடைய வலைதளம் மற்றும் செயலிகளில் இந்திய வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அனைத்து தயாரிப்புகளின் அதிகபட்ச சில்லறை விலையை அவசியம் குறிப்பிட வேண்டும் என்று புதிய வரைவு மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

ஆன்லைன் வர்த்தகத்தை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு கொள்கை முடிவுகள் புதிய வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ளதால் இத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்க அது வழிவகுக்கும் என்று இத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com