பங்குச் சந்தைகளில் தொடர் உற்சாகம்

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. 
பங்குச் சந்தைகளில் தொடர் உற்சாகம்


இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. 
சர்வதேச சந்தைகளில் வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையிலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டனர். குறிப்பாக, ரூபாய் மதிப்பு சரிவால் முதலீட்டாளர்கள் தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளை போட்டி போட்டு வாங்கினர். அதேபோன்று ரியல் எஸ்டேட் துறை பங்குகளுக்கும் சந்தையில் அதிக தேவை காணப்பட்டது.
ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்சிஎல் டெக், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி, கோட்டக் வங்கி, பவர் கிரிட், ஹீரோ மோட்டோகார்ப், வேதாந்தா நிறுவனப் பங்குகளின் விலை 1.91 சதவீதம் வரை அதிகரித்தன. காலாண்டு முடிவுகளை எதிர்பார்த்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்யுஎல் பங்குகளின் விலையும் 1.12 சதவீதம் வரை சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 52 புள்ளிகள் உயர்ந்து 36,374 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 14 புள்ளிகள் அதிகரித்து 10,905 புள்ளிகளில் நிலைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com