ரிலையன்ஸ் காலாண்டு லாபம் ரூ.10,000 கோடியை தாண்டி சாதனை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.10,000 கோடி என்ற மைல்கல்லைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த
ரிலையன்ஸ் காலாண்டு லாபம் ரூ.10,000 கோடியை தாண்டி சாதனை


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.10,000 கோடி என்ற மைல்கல்லைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றின் காலாண்டு லாபம் இந்த அளவிற்கு அதிகரித்துள்ளது இதுவே முதல்முறை.
இதற்கு முன்பு, பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 2013 ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.14,512.81 கோடி நிகர லாபத்தை ஈட்டியிருந்ததே அதிகபட்ச அளவாக கருதப்பட்டது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
எண்ணெய் முதல் தொலைத் தொடர்பு சேவை வரை பெரும்பாலான துறைகளில் தடம்பதித்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 2018 அக்டோபர்-டிசம்பர் காலாண்டு வருவாய் சென்ற நிதியாண்டைக் காட்டிலும் 56 சதவீதம் அதிகரித்து ரூ.1,71,336 கோடியாக இருந்தது. 
நிகர லாபம் ரூ.9,420 கோடியிலிருந்து 8.8 சதவீதம் அதிகரித்து ரூ.10,251 கோடியை எட்டியது. சுத்திகரிப்பு லாபம் குறைந்துபோன நிலையிலும், பெட்ரோகெமிக்கல், சில்லறை வர்த்தகம் மற்றும் தொலைத் தொடர்பு வர்த்தகத்தின் மூலமாக கிடைக்கும் வருவாய் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்ததையடுத்தே நிகர லாபம் சாதனை அளவைத் தொட்டுள்ளது.
குறிப்பாக, நிறுவனத்தின் சில்லறை வர்த்தகப் பிரிவின் லாபம் 210 சதவீதம் அதிகரித்து ரூ.1,512 கோடியாக இருந்தது.
அதேபோன்று, ரிலையன்ஸ் ஜியோவின் தனிப்பட்ட நிகர லாபமும் 65 சதவீதம் அதிகரித்து ரூ.831 கோடியை எட்டியது. இதற்கு, செப்டம்பர் காலாண்டில் 25.23 கோடியாக இருந்த ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை டிசம்பர் காலாண்டில் 28.01 கோடியாக அதிகரித்ததே முக்கிய காரணம்.
மேலும், பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தின் மூலமாக கிடைத்த வரிக்கு முந்தைய லாபம் 43 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.8,221 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு ரூ.76,740 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.77,933 கோடியாகியுள்ளது என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com