எஸ்​பிஐ லைஃப் இன்​சூ​ரன்ஸ் புதிய பிரீ​மி​யம் வசூல் 32% அதி​க​ரிப்பு

நாட்டின் முன்​னணி ஆயுள் காப்​பீட்டு நிறு​வ​னங்​க​ளுள் ஒன்​றான எஸ்​பிஐ லைஃப் இன்​சூ​ரன்ஸ் புதிய பிரீ​மி​யம் வசூல் டிசம்​ப​ரு​டன் முடி​வ​டைந்த ஒன்​பது மாத காலத்​தில் 32 சத​வீ​தம் அதி​க​ரித்​துள்​ளது. 
எஸ்​பிஐ லைஃப் இன்​சூ​ரன்ஸ் புதிய பிரீ​மி​யம் வசூல் 32% அதி​க​ரிப்பு


நாட்டின் முன்​னணி ஆயுள் காப்​பீட்டு நிறு​வ​னங்​க​ளுள் ஒன்​றான எஸ்​பிஐ லைஃப் இன்​சூ​ரன்ஸ் புதிய பிரீ​மி​யம் வசூல் டிசம்​ப​ரு​டன் முடி​வ​டைந்த ஒன்​பது மாத காலத்​தில் 32 சத​வீ​தம் அதி​க​ரித்​துள்​ளது. 
இது​கு​றித்து அந்த நிறு​வ​னம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தா​வது:
கடந்த 2018 டிசம்​பர் மாதத்​து​டன் முடி​வ​டைந்த ஒன்​பது மாத காலத்​தில் புதிய வணிக பிரீ​மி​யம் வசூல் ரூ.9,470 கோ​டி​யாக இருந்​தது. கடந்​தாண்டு இதே காலத்​தில் ஈட்டிய வசூ​லான ரூ.7,200 கோ​டி​யு​டன் ஒப்​பி​கை​யில் இது 32 சத​வீ​தம் அதி​கம். 
கூடு​தல் கவ​னம் செலுத்தி வரு​வ​தை​ய​டுத்து, பாது​காப்பு பாலி​சி​கள் மூல​மாக ஈட்டப்​பட்ட புதிய வணிக பிரீ​மி​யம் வசூல் 170 சத​வீ​தம் உயர்ந்து ரூ.1,060 கோ​டியை எட்டி​யுள்​ளது. தனி​ந​பர் புதிய பிரீ​மி​யம் வசூல் ரூ.5,790 கோ​டி​யி​லி​ருந்து 14 சத​வீ​தம் அதி​க​ரித்து ரூ.6,600 கோ​டியை எட்டி​யுள்​ளது.
டிசம்​பர் மாதத்​து​டன் முடி​வ​டைந்த ஒன்​பது மாதங்​க​ளில் நிறு​வ​னத்​தின் நிகர லாபம் 13 சத​வீ​தம் உயர்ந்து ரூ.860 கோ​டி​யைத் தொட்டுள்​ளது. 
கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்​பர் இறுதி நில​வ​ரப்​படி நிறு​வ​னம் நிர்​வ​கிக்​கும் சொத்து மதிப்பு ரூ.1,11,630 கோ​டி​யி​லி​ருந்து 20.2 சத​வீ​தம் அதி​க​ரித்து ரூ.1,34,150 கோ​டியை எட்டி​யுள்​ளது எனஎஸ்​பிஐ லைஃப் தெ​ரி​வித்​துள்​ள​து.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com