இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 10 சதவீத வளர்ச்சி

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை கடந்த 2018-ஆம் ஆண்டில் 10 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது என கவுன்டர்பாயின்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 10 சதவீத வளர்ச்சி

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை கடந்த 2018-ஆம் ஆண்டில் 10 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது என கவுன்டர்பாயின்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2018-ஆம் ஆண்டில் 14.5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. 2017-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ஸ்மார்ட்போன் சந்தை 10 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்தாண்டில் விற்பனையான 33 கோடி மொபைல்போன்களில் ஸ்மார்ட்போன்களின் பங்களிப்பு மட்டும் 44 சதவீதம் அளவுக்கு இருந்தது. ஆனால், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் "பீச்சர் போன்' எனப்படும்  சாதாரண வகை போன்களின் விற்பனை மிகவும் வேகமாக 11 சதவீதம் அளவுக்கு உயர்ந்து 18.5 கோடியாக காணப்பட்டது.
கடந்தாண்டில் ஜியோமி நிறுவனம் 28 சதவீத பங்களிப்புடன் ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தில் இருந்தது. இதைத்தொடர்ந்து,  சாம்சங் (24 சதவீதம்), விவோ (10 சதவீதம்), ஓப்போ (8 சதவீதம்), மைக்ரோமேக்ஸ் (5 சதவீதம்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.
சீனாவுக்கு அடுத்தபடியாக ஸ்மார்ட்போனுக்கான மிகப்பெரிய சந்தையை இந்தியா பெற்றுள்ளது. இங்கு ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 43 கோடியை தாண்டியுள்ளது. கண்டறியப்பட்ட ஒட்டுமொத்த ஸ்மார்ட்போனுக்கான சந்தையில் இது 45 சதவீதமே. எனவே, ஸ்மார்ட்போன் விற்பனைக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் இந்திய சந்தைகளில் காணப்படுகின்றன.
இதனை எதிரொலிக்கும் விதமாக, கடந்தாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை மின்னல் வேகத்தில் அதிகரித்த நிலையில், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அவற்றின் விற்பனை சரிவை சந்தித்துள்ளது என கவுன்டர்பாயின்ட் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com