இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறையும்

பொதுத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளால், நடப்பாண்டின் முதல் அரையாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறையும் என ஜப்பானைச் சேர்ந்த தரகு நிறுவனமான நோமுரா தெரிவித்துள்ளது. 

பொதுத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளால், நடப்பாண்டின் முதல் அரையாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறையும் என ஜப்பானைச் சேர்ந்த தரகு நிறுவனமான நோமுரா தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
கடந்த 2017 முதல் அரையாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக காணப்பட்ட  நிலையில், நடப்பாண்டில் முதல் அரையாண்டில் இது 6.6 சதவீதமாக குறையும். இதற்கு,  சர்வதேச சுணக்க நிலை, நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டில் காணப்பட்டு வரும்  நிச்சயமற்ற தன்மை ஆகியவை முக்கிய காரணமாக இருக்கும். இருப்பினும், நான்காவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையிலிருந்து மீண்டு 7.2 சதவீதமாக அதிகரிக்கும் என்று நோமுரா 
தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com