பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 368 புள்ளிகள் சரிவு

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. இதையடுத்து, சென்செக்ஸ் 368 புள்ளிகள் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 368 புள்ளிகள் சரிவு

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. இதையடுத்து, சென்செக்ஸ் 368 புள்ளிகள் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி சமர்ப்பிக்கப்படவுள்ள மத்திய பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பால் பங்குச் சந்தைகளில்  திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடனேயே காணப்பட்டது.
அமெரிக்க-சீன வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள சச்சரவு, அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் குறித்த முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு போன்றவற்றால் உலகளவில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாகவே காணப்பட்டது. இது இந்தியப் பங்குச் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
நிதி சிக்கன நடவடிக்கைகளிலிருந்து விலகி ஜனரஞ்சகமான பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே நிலவி வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிதித் துறை சார்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி விற்பனை செய்தனர். இதைத் தவிர, மோட்டார் வாகனம், நுகர்வோர் சாதனங்கள் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.
யெஸ் வங்கி பங்கின் விலை 5.46 சதவீதமும், பஜாஜ் பைனான்ஸ் 5.40 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 3.82 சதவீதமும், இன்டஸ்இண்ட் வங்கி பங்கின் விலை 3.10 சதவீதமும், ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை 2.55 சதவீதமும் சரிந்தன. 
இவை தவிர, சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ, வேதாந்தா, ஆக்ஸிஸ் வங்கி, ஐடிசி, டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி, மஹிந்திரா, ரிலையன்ஸ், எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், பார்த்தி ஏர்டெல், ஹெச்யுஎல், ஹெச்டிஎஃப்சி வங்கி, கோட்டக் வங்கி, இன்ஃபோசிஸ் பங்குகளின் விலையும் சரிவை சந்தித்தன.
அதேசமயம், முதலீட்டாளர்களிடம் கிடைத்த வரவேற்பால் டிசிஎஸ் பங்கின் விலை 1.71 சதவீதம் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, கோல் இந்தியா, லார்சன் அண்டு டூப்ரோ, பவர்கிரிட், ஏஷியன் பெயின்ட், ஹெச்சிஎல் டெக்  மற்றும் என்டிபிசி நிறுவனப் பங்குகளின் விலை 1.51 சதவீதம் வரை அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 368 புள்ளிகள் சரிந்து 35,656 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 119 புள்ளிகள் குறைந்து 10,661 புள்ளிகளில் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com