பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம்

சாதகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிலவரங்களால் தொடர்ந்து நான்காவது நாளாக பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம் காணப்பட்டது.
பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம்


சாதகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிலவரங்களால் தொடர்ந்து நான்காவது நாளாக பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம் காணப்பட்டது.
அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவான ஏற்றத்தைச் சந்தித்தது. அதேபோன்று, இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீட்டு வரத்தும் தொடர்ந்து அதிகரித்தே காணப்பட்டது.
இதுபோன்ற சாதகமான சூழல்கள் முதலீட்டாளர்களின் மனதில் சாதகமான தாக்கங்களை உருவாக்கின. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. சர்வதேச சந்தைகளைப் பொருத்தவரையில், அமெரிக்காவில் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது, ஐரோப்பிய மத்திய வங்கி கூட்டம் ஆகியவற்றை எதிர்பார்த்து வர்த்தகம் ஏற்ற இறக்கமாகவே காணப்பட்டது.
உள்நாட்டு வாடிக்கையாளரிடமிருந்து அதிக மதிப்பிலான வர்த்தக ஆணையைப் பெற்றதாக அறிவித்ததன் எதிரொலியாக சென்செக்ஸ்  30 நிறுவனங்களின் பட்டியிலில் உள்ள எல் அண்டு டி பங்கின் விலை அதிகபட்சமாக 2.76 சதவீதம் அதிகரித்தது.
மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, ஐடிசி, எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், டாடா ஸ்டீல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவன பங்குகளும் 1.77 சதவீதம் வரை அதிகரித்தன. அதேசமயம், வாடிக்கையாளர்களின் ஆதரவின்றி, கோல் இந்தியா, சன் பார்மா, என்டிபிசி, ஓஎன்ஜிசி மற்றும் யெஸ் வங்கி பங்குகளின் விலை 3.09 சதவீதம் வரை சரிவடைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 89 புள்ளிகள் அதிகரித்து 36,725 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 5 புள்ளிகள் உயர்ந்து 11,058 புள்ளிகளில்  நிலைத்தது. 
கடந்த நான்கு நாள்களில் மட்டும் சென்செக்ஸ் 858 புள்ளிகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com