அந்நிய நேரடி முதலீடு ரூ.7 லட்சம் கோடியை எட்டும்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 கோடி டாலர் (ரூ.7 லட்சம் கோடி) அளவிலான முதலீட்டை கவர்வதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, நிச்சயம் எட்டப்படும் என மத்திய வர்த்தகத் துறை
அந்நிய நேரடி முதலீடு ரூ.7 லட்சம் கோடியை எட்டும்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 கோடி டாலர் (ரூ.7 லட்சம் கோடி) அளவிலான முதலீட்டை கவர்வதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, நிச்சயம் எட்டப்படும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு சனிக்கிழமை தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
 கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட 1,600 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் இந்தியாவில் அதிக அளவிலான அந்நிய நேரடி முதலீடு வருவதற்கு வழிகோலியது. ஒரே ஒப்பந்தத்தின் மூலம் இந்த அளவுக்கு அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு கிடைத்தது அதுவே முதல் முறை.
 கடந்த 2018-ஆம் ஆண்டில்தான் கடந்த இருபது ஆண்டுகளில் முதல் முறையாக உள்நாட்டுக்குள் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியா சீனாவை விஞ்சி சாதனை படைத்தது. அந்த ஆண்டில் சீனாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 3,200 கோடி டாலராக மட்டுமே இருந்த நிலையில் இந்தியாவில் அது 3,800 கோடி டாலராக இருந்தது கவனிக்கத்தக்கது.
 இதுதவிர, யுனிலீவர் ஜிஎஸ்கே கன்ஸ்யூமர் வர்த்தகத்தை ரூ.31,700 கோடி மதிப்பிற்கு கையகப்படுத்தியது, ஷிநைடர் எலக்ட்ரிக், டிபிஜி கேபிட்டல், கேகேஆர், சாப்ட்பேங்க் மற்றும் அலிபாபா போன்ற நிறுவனங்களின் ஒப்பந்தங்களும் கணிசமான அந்நிய நேரடி கிடைப்பதற்கு வழிவகுத்தன.
 அந்நிய நேரடி முதலீட்டைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டில் சாதனை அளவைத் தொட்டது. இந்த நிலையில், வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் 10,000 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீட்டை பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த இலக்கு நிச்சயம் எட்டப்படும். ஏனெனில், அதற்கு தேவையான கொள்கைகள் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
 கடந்த 2014-இல் 32,300 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதே சாதனை அளவாக கருதப்பட்டது. இந்த நிலையில், நடப்பாண்டில் ஏற்றுமதி 33,000 கோடி டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பழைய சாதனை முறியடிக்கப்படும். ஆனால், அதனால் திருப்தியடைய முடியாது. ஏற்றுமதி அதிகரிக்கும்போது அது வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்க கூடியதாகவும் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான மகிழ்ச்சியாக இருக்கும்.
 தடைகள் நீக்கப்படும்நிலையில் அனைத்து மூலங்கள் வாயிலாக வரும் முதலீடுகளை அது ஊக்குவிக்கும். அதுமட்டுமின்றி சிறப்பான வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com