வர்த்தகம்

பங்குச் சந்தையில் தொடர் முன்னேற்றம்

DIN


அந்நிய முதலீட்டு வரத்தால் இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து 6-ஆவது வர்த்தக தினமாக முன்னேற்றத்தைக் கண்டது.
சாதகமான சர்வதேச நிலவரங்களுக்கிடையில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. அதேபோன்று, எதிர்பாராத அளவிலான அந்நிய முதலீட்டு வரத்தும் இந்தியப் பங்குச் சந்தைகளில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது. 
இதுபோன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறை குறியீட்டெண் 2.46 சதவீதம் என்ற அளவில் அதிகபட்ச ஏற்றத்தைக் கண்டது. இதையடுத்து, எண்ணெய் எரிவாயு துறை குறியீட்டெண் 1.55 சதவீதமும்,  பொதுத் துறை 0.94 சதவீதமும், வங்கி 0.88 சதவீதமும், உலோக துறை குறியீட்டெண் 0.79 சதவீதமும் உயர்ந்தன.
அதேசமயம், மோட்டார் வாகனம், பொறியியல் பொருள்கள், தகவல் தொழில்நுட்பம், ஆரோக்கிய பராமரிப்பு துறை குறியீட்டெண் 1.36 சதவீதம் வரை குறைந்தன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில்,  பஜாஜ் பைனான்ஸ் பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டதையடுத்து அதன் விலை 2.84 சதவீதம் வரை உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, பவர் கிரிட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் வங்கி, டாடா ஸ்டீல், கோட்டக் வங்கி, இன்டஸ்இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஏஷியன் பெயின்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, சன்பார்மா, யெஸ் வங்கி பங்குகளின் விலை 2.29 சதவீதம் வரை அதிகரித்தது. 
அதேசமயம், மாருதி சுஸுகி, ஹீரோ மோட்டோகார்ப், பார்த்தி ஏர்டெல், ஹெச்சிஎல் டெக், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, எல் அண்டு டி, இன்ஃபோசிஸ், வேதாந்தா, பஜாஜ் ஆட்டோ, பங்குகளின் விலை 2.56 சதவீதம் வரையில் சரிந்தது.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்ந்து 38,095 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 35 புள்ளிகள் அதிகரித்து 11,462 புள்ளிகளில் நிலைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT