எஸ்ஆர்எஸ் பைனான்ஸ்  ரூ.13 கோடி கடன் மோசடி: ரிசர்வ் வங்கியிடம் கர்நாடக வங்கி அறிக்கை தாக்கல்

கர்நாடக வங்கியில் எஸ்ஆர்எஸ் பைனான்ஸ் நிறுவனம் கடன் மோசடியில் ஈடுபட்டது தொடர்பான அறிக்கையை அந்த வங்கி ரிசர்வ் வங்கியிடம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து கர்நாடக வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
எஸ்ஆர்எஸ் பைனான்ஸ் நிறுவனம் மூலதன தேவையின் அடிப்படையில் கர்நாடக வங்கியிடமிருந்து ரூ.13.26  கோடி வரை கடனாக பெற்றது. ரிசர்வ் வங்கி ஏற்கெனவே வழங்கிய வழிகாட்டுதல்களின்படி பல்வேறு வங்கிகளின் ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ் இந்த மூலதன தேவை வசதியை கர்நாடக வங்கி ஏற்படுத்தித் தந்தது.
இருப்பினும், அந்த நிதி பல்வேறு வகைகளில் மடைமாற்றம் செய்யப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கை ரிசர்வ் வங்கியிடம் வழங்கப்பட்டுள்ளது என கர்நாடாக வங்கி, மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com