பொது இடத்தில் தன்னுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள முயன்ற ரசிகருக்குப் ‘பளார்’ விட்ட பாலகிருஷ்ணா!

இந்நிலையில் கூட்ட நெரிசலில், ரசிகர் ஒருவர் பாலகிருஷ்ணாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவரை நெருங்கி வந்து பாலகிருஷ்ணாவின் மேலே விழவே
 பொது இடத்தில் தன்னுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள முயன்ற ரசிகருக்குப் ‘பளார்’ விட்ட பாலகிருஷ்ணா!

தென்னிந்திய நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணா, நடிகர் மட்டுமல்ல அவர் ஒரு தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியும் கூட. அதோடு அவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவியின் சகோதரரும் கூட. வரப்போகும் ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் ஹைதராபாத்திலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் நந்தியல் தொகுதியில் பாலகிருஷ்ணா போட்டியிடுகிறார். அதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள நேற்று பாலகிருஷ்ணா, நந்தியல் சென்றிருந்தார். அப்போது பாலகிருஷ்ணாவை நேரில் காண்பதற்காக அவரது ரசிகர்களிடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில் கூட்ட நெரிசலில், ரசிகர் ஒருவர் பாலகிருஷ்ணாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவரை நெருங்கி வந்து பாலகிருஷ்ணாவின் மேலே விழவே, ஏற்கனவே நெரிசலில் சிக்கித் திணறிக் கொண்டிருந்த பாலகிருஷ்ணா, கோபத்தில் ரசிகரை அதிரடியாகத் தாக்கி விட்டார். பாலகிருஷ்ணா இப்படிச் செய்வது முதல் முறையல்ல, இதற்கு முன்பே, அதிகப்படியான கோபத்தில் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்தே, தன் வீட்டுக்கு வந்து தன்னுடன் விவாதித்துக் கொண்டிருந்த தயாரிப்பாளர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டவர் தான் ‘பாலய்யா’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நந்தமூரி பாலகிருஷ்ணா.

ரசிகரைத் தாக்கிய பாலய்யா, அத்துடன் கோபமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார். சம்பவம் நடைபெற்ற போது பாலய்யாவைச் சுற்றி அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, பாலய்யா, தனது மைத்துனரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் ’தெலுகு தேசம் கட்சி’ சார்பில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப் பட்ட சட்டமன்ற உறுப்பினரும் கூட என்பதால் அவருடன் அவரது ஆதரவாளர்களும் சூழ்ந்திருந்தனர்.

முன்னதாக ஆந்திர சட்டமன்றத் தேர்தல் கூட்டங்களில் சந்திரபாபு நாயுடுவை காட்டமாக விமர்சித்து வரும் எதிரணித் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டிக்கு தற்போது பாலய்யாவின் இச்செயல் எரிகிற நெருப்பில் எண்ணெய் விட்ட கதையாக தெலுகு தேசக் கட்சித் தலைவரையும், அதன் உறுப்பினர்களையும் மேலும் காட்டமாக விமர்சிக்க மிகச்சிறந்த வாய்ப்பை அள்ளி வழங்கியிருக்கிறது.

ஆந்திரா மிளகாயில் மட்டுமல்ல ஆந்திர அரசியலிலும் கூட காரம் அதிகம் தான் போல!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com