செய்திகள்

‘பிக் பாஸ்’ ஜூலி நடிகையா? யூடியூப் வீடியோக்களை முன்வைத்து எழுந்துள்ள புதிய சர்ச்சை! (வீடியோ)

எழில்

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். 

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியில் பங்குபெறும் 15 போட்டியாளர்களில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்று, கோஷங்கள் மூலம் அரசியல்வாதிகளை விமரிசனம் செய்து புகழ்பெற்றவரா ஜூலியும் ஒருவர். 

ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்ற சமயத்தில் இவருடைய கோஷங்கள் வீடியோக்களாக சமூகவலைத்தளங்கில் அதிகம் பகிரப்பட்டன. அப்போது, வீரத்தமிழச்சி என்கிற பட்டமும் அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக வாட்ஸப்பில் வதந்திகள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு ஒரு பேட்டியில், தான் நலமுடன் உள்ளதாக ஜூலி அறிவித்தார்.

 இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அவர் அறிமுகமானது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. இந்த நிகழ்ச்சியின் மூலமாகப் புதிய குடும்ப உறுப்பினர்களைப் பெறப்போகிறேன் என்று நட்புணர்வுடன் பதில் அளித்து கமலிடம் பாராட்டுப் பெற்றார் ஜூலி.

ஆரம்பம் முதல், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக அதிகம் விவாதிக்கப்பட்டவர், ஜூலி. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தலைவர்களை விமரிசித்தது ஏன் என ஜூலியிடம் காயத்ரி ரகுராமும் ஆர்த்தியும் கேள்வி எழுப்பி நெருக்கடி அளித்தது நிகழ்ச்சியில் பரபரப்பை உண்டாக்கியது. 

நிகழ்ச்சியில் பல சந்தர்ப்பங்களில் தான் ஒரு சாதாரண பெண், மற்ற போட்டியாளர்களைப் போல எந்த சினிமா பின்புலமும் இல்லாதவள், இதனால் நான் ஜெயித்துவிடுவேன் என மற்றவர்கள் நினைக்கிறார்கள் என்றெல்லாம் பேசியிருக்கிறார் ஜூலி. இந்த ஒரு அம்சத்தால் ஜூலிக்கு ரசிகர்களின் ஆதரவும் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் ஜூலி, இசை ஆல்பத்தின் வீடியோவில் நடித்திருக்கும் விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. யூடியூப் இணையத்தளத்தில் இரண்டு பாடல்களின் வீடியோக்களில் ஜூலி ஆடிப்பாடி நடித்துள்ளார். இது சமூகவலைத்தளத்தில் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளது. தான் ஒரு சாதாரண பெண், மற்றவர்களைப் போல நடிகரோ மாடலோ அல்ல என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடிச் சொன்னவர், இந்த நடிப்பு அனுபவத்தை மறைத்தது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அல்லது  இந்த நடிப்பு அனுபவத்தை அவர் தெரிவித்து அது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியாகாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளதா என்றும் எண்ணத் தோன்றுகிறது. 

சமீபத்தில் சூப்பர் சிங்கர் பட்டத்தை ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் வென்றபோது இதே போன்றதொரு சர்ச்சை எழுந்தது. சினிமாவில் பாடியதை மறைத்து போட்டியில் கலந்துகொண்டு ஜெயித்துள்ளார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல ஜூலியும் தானொரு நடிகை என்பதை மறைத்துள்ளார் என்கிற புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியே வந்தபிறகு (அல்லது வென்றபிறகு?) ஜூலி இதுகுறித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT