செய்திகள்

நடிகையாவதை விட மகள் திருமணம் செய்துகொண்டால் கூடுதல் மகிழ்ச்சி: ஸ்ரீதேவி

எழில்

நடிகை ஸ்ரீதேவி மகள்களான ஜான்வி, குஷி ஆகியோர் குறித்து அடிக்கடி ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. இதுபற்றி ஸ்ரீதேவி எப்படி எடுத்துக்கொள்கிறார். அவருடைய மகள்கள்?

இதுகுறித்து ஸ்ரீதேவி சமீபத்தில் கூறியதாவது:

என் மகள்களை ஊடகங்கள் கவனிப்பது எரிச்சலாகவே உள்ளது. சமீபத்தில் என் மகள் அவளைப் பற்றிய ஒரு வதந்தி குறித்து மிகவும் கவலைப்பட்டார். படுக்கையில் படுத்தபடி அதை எண்ணி வருத்தப்பட்டாள். அவளிடம் நான் சொன்னேன், இது எளிதான உலகம் அல்ல. இந்த உலகத்துக்கு உன்னை வரவேற்கிறேன். இதுதான் உன் துறை என்று நீ தேர்ந்தெடுத்தால் வதந்திகளுக்குத் தயாராக இரு என்று கூறினேன். 

என் மகள் ஜான்வி பாலிவுட்டில் நுழைய எனக்கு விருப்பம் இல்லை. ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 பட வாய்ப்பு அவளுக்கு வந்தபோது அதில் நடிக்கவேண்டாம் என்றே கூறினேன். ஆனால் அவள் அதில் நடிக்க விருப்பப்பட்டாள். இதை மோசமான துறை என நான் சொல்லமாட்டேன். ஏனெனில் நானும் இத்துறையைச் சேர்ந்தவள் தான். ஆனால் ஒரு தாயாக அவள் திருமணம் செய்வதே எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியானது. அதேசமயம் அவளுடைய விருப்பம்தான் முக்கியம். அவள் ஒரு நடிகையாகத் திறமையை வெளிப்படுத்தினால் நான் நிச்சயம் மகிழ்வேன் என்று கூறியுள்ளார். 

நடிகை ஸ்ரீதேவியின் 300-வது படம் - மாம். 2017ம் வருடம் அவருடைய திரையுலக வாழ்வின் 50-வது வருடம். 1967-ம் வருடம் ஜூலை 7-ம் தேதி துணைவன் படத்தில் ஸ்ரீதேவி அறிமுகமானார். அதே தினத்தில் மாம் படமும் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு இசை - ஏ.ஆர். ரஹ்மான். 

ரவி உத்யவார் இயக்கத்தில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் வெளியாகும் மாம் படம், ஹிந்தியில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றிலும் டப் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது. இந்த நான்குப் பதிப்புக்கும் சொந்தக் குரலில் பேசியுள்ளார் ஸ்ரீதேவி. 

2012-ல் வெளியான 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தில் கடைசியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். இதனால் தற்போது மாம் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

SCROLL FOR NEXT