டம்ளர் தண்ணீரில் கஷ்டம் தீர வழி சொல்கிறார் வீஜே அர்ச்சனா! சிம்ப்ளி சூப்பர்ப்!

அர்ச்சனா இன்றைக்கு தமிழில் இருக்கும் தன்னம்பிக்கை நிறைந்த கலகலப்பான வீஜேக்களில் ஒருவர். எதையும் மாற்றி யோசித்து தான் தொகுத்து வழங்கக் கூடிய நிகழ்ச்சிகளுக்கு மேலும் மேலும் சுவாரஸ்யம் கூட்டக் கூடிய தொகு
டம்ளர் தண்ணீரில் கஷ்டம் தீர வழி சொல்கிறார் வீஜே அர்ச்சனா! சிம்ப்ளி சூப்பர்ப்!

உங்கள் வீட்டில் எல்லா இடங்களுமே உங்களுக்குப் பிடித்தவையாக இருக்கலாம். சொந்த வீடோ, வாடகை வீடோ, எதுவானாலும் இது என்னுடைய வீடு என்று சொல்லிக் கொள்ள ஒரு கூடு இருக்க வேண்டும் என்பது தான் மனிதர்கள் அனைவரது விருப்பமாகவும் இருக்கிறது. அந்த வீட்டில்... அதாவது உங்களது வீடாகிய கூட்டில் உங்களுக்கே உங்களுக்கென்று பிடித்தமான ஓரிடம் நிச்சயம் இருக்கக் கூடும். அது உங்களது மொட்டைமாடி வெட்டவெளியாகவோ, அமைதியான வரவேற்பறையாகவோ, பால்கனியாகவோ, மாடித் தோட்டமாகவோ, மித வெளிச்சமும் அமைதியும் கொண்ட படுக்கையறையாகவோ இருக்கலாம். ஏன், பலருக்கு சமையல் அறை கூட மனதுக்கு நெருக்கமான இடமாக அமைந்து போயிருக்கலாம். சிலருக்கு குளியலறை. சிலருக்கு டைனிங் டேபிள். எப்படி அந்தந்த இடங்கள் அவரவருக்குப் பிடித்துப் போகிறது என்றால், அந்தந்த இடங்களோடு மனம் உருவாக்கிக் கொள்ளும் பிணைப்பு தான் அந்த நெருக்கத்துக்குக் காரணம். 

பத்தாம் வகுப்புப் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கையில் நாங்களிருந்த வாடகை வீட்டில் எனக்கு மனதுக்கு மிக நெருக்கமான இடமாக இருந்தது... எங்கள் வீட்டுப் படுக்கையறை மூலையில் இடுப்புயர ஸ்டாண்டில்  டெலிஃபோன் ஸ்டாண்டுக்கு 
அடியிலிருக்கும் வெற்றிடம். அங்கே என்ன ஸ்பெஷல் என்றால், அங்கு உட்கார்ந்து கொண்டு காலை நீட்டினால் கால் பெருவிரல் கதவை நெருடும். அப்படி நிரடிக் கொண்டே பாடங்களைப் படிப்பது எனக்குப் பிடிக்கும். அப்படிப் படித்தால் மதிப்பெண்கள் நிறையக் கிடைக்கும் என்பது அன்றைக்கு எனக்கிருந்த நம்பிக்கை. அது சும்மா தொடங்கி பிறகு செண்டிமெண்ட்டாகி அப்புறம் பழக்கமாகி விட்டது. இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு இடம் ப்ரியத்துக்கு உகந்த இடமாக இருப்பது தான் வீடாகிய கூட்டின் தனித்தன்மை. 

காலையில் ‘லிட்டில் டாக்ஸ்’ என்றொரு யூடியூப் சேனலில் ஜீ தமிழ் வீஜேவாக தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் அர்ச்சனா( ரசிகர்களுக்கு செல்லமாக அச்சும்மா) வின் நிகழ்ச்சி ஒன்றைக் காண நேர்ந்தது. அர்ச்சனா இன்றைக்கு தமிழில் இருக்கும் தன்னம்பிக்கை நிறைந்த கலகலப்பான வீஜேக்களில் ஒருவர். எதையும் மாற்றி யோசித்து தான் தொகுத்து வழங்கக் கூடிய நிகழ்ச்சிகளுக்கு மேலும் மேலும் சுவாரஸ்யம் கூட்டக் கூடிய தொகுப்பாளர்களில் இவரும் ஒருவர் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. லிட்டில் டாக்ஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா தனது வீட்டில் தனக்கு மனதுக்கு நெருக்கமான இடமாகக் அறிமுகப்படுத்தியது அவரது படுக்கையறையையும் பால்கனி வெட்டவெளியில் காணக்கிடைக்கும் குட்டி மாடித்தோட்டத்தையும். 

நிகழ்ச்சி நன்றாகவே இருந்தது. வழக்கம் போலத் தனது இடைவிடாத ரயில்மழைப் பேச்சோடு பேச்சாக அர்ச்சனா... வாழ்க்கையில் கஷ்டம் நிவாரணம் குறித்து பகிர்ந்து கொண்ட விஷயம் தான் நிகழ்ச்சியின் ஹைலைட்.

ஒரு டம்ளர் தண்ணீரை கையில் பிடித்துக்கொண்டு நீட்டிய கையை மடக்காமல் ஒரு மணி நேரம் நின்று பாருங்கள்!

நீட்டிய கை தான் வாழ்க்கை... கையிலிருக்கும் டம்ளர் தண்ணீர் தான் வாழ்வின் கஷ்டங்கள்.

அவற்றை விடவே மாட்டேன் என்று எத்தனை மணி நேரம் உங்களால் நீட்டிய கையை மடக்காமல் பிடித்துக் கொண்டே நிற்க முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

ஒரு மணி நேரம்... இரண்டு மணி நேரம்?!

அரைநாள்?!

ஏதோ தெய்வ கட்டளை போல ஒரு மணி நேரம் கூட நின்று விடுவீர்கள். பிறகு யார் சொன்னாலும் நிற்க முடியாது தானே! கை வலிக்கும், அப்புறம் யார் சொன்னால் என்ன? என்று தூக்கிப் போட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவீர்கள் இல்லையா?

அப்படித்தான் கஷ்டங்களையும் தூக்கிப் போட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விட வேண்டும்.

டம்ளர் தண்ணீரை நீட்டிய கையை மடக்காமல் வைத்துச் சுமந்து கொண்டு நிற்பது தான் அப்போதைக்கு கஷ்டமான காரியமாக இருந்திருக்க முடியும்.

டம்ளரை தூக்கிப் போட்டதின் பின்னால் உங்களுக்கு அந்தக் கஷ்டம் இல்லை. போயே போச்சு... இட்ஸ் கான்... போயிந்தே கதை தான்.

இதைத்தான் அர்ச்சனா அந்த நிகழ்ச்சியில் அழகாகச் சொன்னார்.

யார் சொன்னால் என்ன? நல்ல விஷயம் சொன்னால் அதை அப்படியே கப்பெனப் பிடித்துக் கொள்ள வேண்டியது தானே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com