விஜய் வராவிட்டால் அஜித் அரசியலுக்கு வருவார்: முன்னாள் பி.ஆர்.ஓவின் ஆருடம் 

ஒருவேளை விஜய் வராவிட்டால் அஜித் அரசியலுக்கு வருவார் என்று நடிகர் விஜய்யின் முன்னாள் பி.ஆர்.ஓவும், தயாரிப்பாளருமான பி.டி .செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
விஜய் வராவிட்டால் அஜித் அரசியலுக்கு வருவார்: முன்னாள் பி.ஆர்.ஓவின் ஆருடம் 

சென்னை: ஒருவேளை விஜய் வராவிட்டால் அஜித் அரசியலுக்கு வருவார் என்று நடிகர் விஜய்யின் முன்னாள் பி.ஆர்.ஓவும், தயாரிப்பாளருமான பி.டி .செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான 'சர்கார்'  படம் அதிமுகவினரின் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. அரசின் இலவசத் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகள் மற்றும் சில வசனங்களினால், படத்திற்கு எதிராக திரையரகங்களில் இரண்டு நாட்கள் போராட்டங்கள்  நீடித்தது. பின்னர் படத்தின் ஒரு காட்சி நீக்கப்பட்டு, சில வசனங்கள் ம்யூட் செய்யப்பட்டன. பின்னர் தற்போது திரையரங்கங்களில் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரூ. 200 கோடிக்கு மேலாக இப்படம் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது       

இந்நிலையில் ஒருவேளை விஜய் வராவிட்டால் அஜித் அரசியலுக்கு வருவார் என்று நடிகர் விஜய்யின் முன்னாள் பி.ஆர்.ஓவும், தயாரிப்பாளருமான பி.டி .செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவியாளராகு இருந்து, பின்னர் அவருக்கு மக்கள் தொடர்பு அதிகாரியாக (பி.ஆர்.ஓ) பணியாற்றியவர் பி.டி .செல்வகுமார். பின்னர் விஜயை வைத்து. சிம்பு தேவனின் இயக்கத்தில் 'புலி ' படத்தினையும் தயாரித்தார். 

தற்போது சினிமா தொடர்பான ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

அரசியல் தொடர்பான என்னுடைய கணிப்புகளின் படி ஒரு பெரிய பட்டியல் உள்ளது. அதில் விஜய்தான் முதலிடத்தில் உள்ளார். எத்தனை முறை அவர் அரசியலகு வருவதில்லை என்று மறுத்தாலும், அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். ஒருவேளை விஜய் வராவிட்டால் அஜித் அரசியலுக்கு வருவார். விஜய் மற்றும அஜித் ஆகிய இருவரில் என்னுடைய ஜோதிட அறிவின் படி விஜய்குத்தான் என்றாவது ஒரு நாள் முதல்வர் நாற்காலியில் அமரும் வாய்ப்பு உள்ளது. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com