‘டாடி மம்மி வீட்டில் இல்லை’ பாடலை விமரிசித்த அமைச்சர் ஜெயக்குமார்: கவிஞர் விவேகா பதில்!

இத்துடன் 3 முறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் இப்பாடலை விமர்சித்து பேட்டி கொடுத்துள்ளார்... 
‘டாடி மம்மி வீட்டில் இல்லை’ பாடலை விமரிசித்த அமைச்சர் ஜெயக்குமார்: கவிஞர் விவேகா பதில்!

திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துக்களைப் பரப்பினால் குழந்தைகள் நல்லவர்களாக வருவார்கள். திரைப்படங்கள் மூலம் எம்ஜிஆர் நல்ல கருத்துக்களைப் பரப்பினார், ஆனால் இப்போது டாடி, மம்மி வீட்டில் இல்லை எனப் பாடுகிறார்கள் என்று சில நாள்களுக்கு முன்பு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

இதற்கு இப்பாடலை எழுதிய கவிஞர் விவேகா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: நான் இந்தப் பாடலை எழுதி 9 வருடம் ஆகிறது. இத்துடன் 3 முறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் இப்பாடலை விமர்சித்து பேட்டி கொடுத்துள்ளார். ஒரு பாடலாசிரியராக ரசிகர்களின் உளவியல் அறிவேன். அமைச்சர் இப்பாடலின் மிகத்தீவிர ரசிகர் என்று கூறியுள்ளார். 

பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த வில்லு படத்தில் டாடி மம்மி வீட்டில் இல்லை பாடல் இடம்பெற்றது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்பாடலுக்கு இசையமைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com